உலக தூய்மை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

0 268
Stalin trichy visit

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது:-

உலக தூய்மை தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி திருச்சி மலைக்கோட்டை சரக்கு பாறை பகுதியில் இன்று நடைபெற்றது. இந்த தூய்மைக்கான விழிப்புணர்வு பேரணியை கவுன்சிலர் மணிமேகலை தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் ஜெயபாரதி கோட்ட தலைவர் ஆண்டாள் சுகாதார அலுவலர் கார்த்திகேயன் சுகாதார ஆய்வாளர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக திருச்சி மாநகராட்சி தூய்மை மாநகராட்சியாக முன்னெடுத்து செல்வோம் என்கிற உறுதி மொழியை மாணவ மாணவிகள் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த பேரணியானது திருச்சி மலைக்கோட்டை சற்குப்பாறையில் தொடங்கி ஆண்டாள் தெரு வழியாக எஸ் ஆர் சி கல்லூரியை சென்று அடைந்தது. பேரணியில் தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.