நுண்குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்குச் சமூக அறம் மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பின்பற்றுதல், நுண்குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பள்ளி தலைமையாசிரியர் மா.சரவணவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திருவெள்ளறை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்குச் சமூக அறம் மற்றும் சட்டம்-ஒழுங்கைப் பின்பற்றுதல்,

நுண்குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு, மாணவர்களின் ஒழுக்க நெறிசார்ந்த செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி பள்ளி வளாகம் மற்றும் பொது வெளியில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் அன்புச்செல்வன் பங்கேற்று மாணவர்களுக்கு இலக்கிய
நயத்தோடு சிறப்புரை ஆற்றி ஒழுக்க நெறி சார்ந்த செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கை பின்பற்றுதல், நுண் குற்றங்கள், கணினி குற்றங்கள் மற்றும் சமூக அறம் குறித்து சிறப்பு பயிற்சி அளித்தார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.