லால்குடி அரசுக் கல்லூரியில் ஆயுர்வேத மருத்துவ முகாம்
திருச்சி, செப். 11 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் மை லைப் ஸ்டைல் பிரைவேட் லிமிடெட் இணைந்து ஆயுர்வேத மருத்துவ விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்து.
இதில் கல்லூரி முதல்வர் முனைவர் டி. ஜெயக்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் சதீஷ்குமார், டாக்டர் ரத்னா, டாக்டர் ஜெயபாலன் மற்றும் அவரது குழுவினர்கள் மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் முகாமில் மருத்துவ விழிப்புணர்வு பரிசோதனை செய்தனர்.
இந்த நிகழ்வில் அனைத்து துறைத் தலைவர்களும், பேராசிரியர்களும், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.