சிறுதானியம் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

0 420
Stalin trichy visit

சிறுதானியம் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் – 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் சிறுதானியத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரனியை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இவ் விழிப்புணர்வு பேரணியில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறுதானியத்தின் பயன்கள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணி நீதிமன்றம் எம் ஜி ஆர் சிலை அருகே நிறைவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.