புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை – வனத்துறை உத்தரவு
தொடர் கனமழையின் காரணமாக திருச்சி புளியஞ்சோலையில் காட்றாற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ள நீர் – பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை உத்தரவு.
இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலை பகுதி நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ளது – கொல்லிமலையின் தெற்கு அடிவார பகுதி ஆன புளியஞ்சோலை திருச்சி மாவட்ட சுற்றுலா பகுதியாக திகழ்ந்து வருகிறது.
இதில் கடந்த மூன்று நாட்களாக நாமக்கல் திருச்சி பெரம்பலூர் அரியலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது நாமக்கல் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக புளியஞ்சோலையில் தொடர்ந்து வெள்ளநீர் பெருக்கெடுத்து வருகிறது.
திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புளியஞ்சோலைக்கு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம் இந்நிலையில் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு புளியஞ்சோலைகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது