இனிப்பு, கார வகைகள் தயாரிப்போர் தர சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள்,
பேக்கரி மற்றும் விற்பனையாளர்கள், பலகார சீட்டு கட்டி இனிப்பு கார வகைகள் செய்து தரும் வியாபாரிகள் உள்ளிட்ட அனைவரும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி பதிவு சான்றிதழை உணவு பாதுகாப்பு துறை மூலம் கட்டாயமாக பெற வேண்டும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவு.
மேலும் இனிப்பு மற்றும் காரப் பலகார வகைகள் கலப்படம் இல்லாமல் சுத்தமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் உணவு
தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ அனுமதிக்கபட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ( color ) பயன்படுத்தக்கூடாது என்றும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் பொருட்களை ஈக்கள் பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத வகையில் பலகாரங்களை தூசி படாத வண்ணம் மூடி வைத்து சுகாதாரமான முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவுறுத்தியுள்ளார்.