திருச்சியில் பெங்களூர் என்ஜினியர் மகன் மாயம்

0 189
Stalin trichy visit

திருச்சி அக் 4 – திருச்சி கே சாத்தனூர் கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை. இவர் பெங்களூரூரில்உள்ள தனியார் கம்பெனியில் சிவில் என்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராம் பிரசாத் . அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.தற்பொழுது விடுமுறை என்பதால் திருச்சி கே.கே. நகர் கே சாத்தனூர் பகுதியில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் ஆவாரம்பூ பறித்துக் கொண்டு வருவதாக கூறி சென்ற ராம்பிரசாத் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.இதை அடுத்து சந்தேகமடைந்து வெளியே வந்து பார்த்த பெற்றோர் ராம்பிரசாத்தை பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக ராம் பிரசாத்தின் தாய் சுமதி கேகே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராம்பிரசாத்தை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.