தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

0 204
Stalin trichy visit

 

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே திருப்பைஞ்சீலியில் தடை செய்யப்ப லாட்டரி சீட்டு விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பஞ்சலி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக மண்ணச்சநல்லூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.தகவலறிந்த மணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் அங்கு ரகசிய சோதனையில் ஈடுபட்டார். அப்போது திருப்பைஞ்சீலி அருள்மிகு நீலி வனநாதர் கோயிலின் பின்புறம் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் சிறுகாம்பூர் பகுதியைச் சேர்ந்த  வடிவேல்(52) என தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ. 200 பணம் பறிமுதல் செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.