19வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆய்வு

0 223
Stalin trichy visit

திருச்சி, ஜன.23 திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 19-வது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருயதராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மேலரண் சாலை பூம்புகார் விற்பனைக் கூடம் அருகில்அமைந்திருக்கும் காமராஜர் வளைவை சீரமைக்கவும், சிங்கரத்தோப்பு -பெரிய கடைவீதியை இணைக்கும் சாலையை விரைவில் சீரமைத்து பொதுமக்களின் சிரமத்தை போக்கிடவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் கணேஷ்பாபு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது மாமன்ற உறுப்பினர் எஸ்.கே.சாதிக் பாட்ஷா, சுகாதார மேற்பார்வையாளர் கார்த்திக், மாவட்ட பிரதிநிதி முகேஷ் குமார், மற்றும் கழகத் தோழர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.