கலைஞருக்கு பாரத ரத்னா விருது : தெற்கு மாவட்ட தி.மு.க. தீர்மானம்
திருச்சி, செப்.2 திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் 2ஆவது பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று திருச்சி நேசனல் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர செயலாளர் மதிவாணன் வரவேற்புரையாற்றினார். மாவட் அவைத் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் 2024-25ஆம் கல்வியாண்டின் பங்குத்தொகையான ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும. மாநில உரிமைகளை பறிக்கும் போக்கை பா.ஜ.க. அரசை கண்டிப்பது. தலைமைக்கழக அறிவிப்பின்படி கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 111 நிகழ்ச்சிகள் நடத்தியது. திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் கலைஞர் சிலையை நிறுவியதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பாராட்டிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது. கடந்த மூன்று ஆண்டுகளில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அரசு திட்டங்களை வாரி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டானுக்கு நன்றி தெரிவிப்பது. 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, ‘தமிழ்நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வெற்றி’ எனும் கழகத் தலைவர் அவர்களின் இலக்கு துணை நிற்போம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, கவிஞர் சல்மா, செந்தில், திவ்யா, மாவட்ட துணை செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.