மணப்பாறையில் கலைஞர் உருவச்சிலை அமைக்க பூமி பூஜை

0 269
Stalin trichy visit

திருச்சி, பிப்.5 கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் சார்பில் தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், திருச்சி கிழக்கு மற்றும் மணப்பாறை ஆகிய மூன்று தொகுதிகளிலும் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவ சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டு திருச்சி கிழக்கு தொகுதியில் சிலை நிறுவப்பட்டு திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது மணப்பாறை தொகுதியில் சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை இன்று திருச்சி திண்டுக்கல் பைபாஸ் சாலையில் உள்ள காய்கறி சந்தை அருகில் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் திருச்சி மாநகர செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.