திருவெறும்பூர் பகுதியில் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த பைக் திருட்டு

0 448
Stalin trichy visit

திருச்சி திருவெறும்பூர் அடுத்த குண்டூர் பர்மா காலனி மாருதி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். மாத்தூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலைக்கு சென்று வேலை முடித்து நள்ளிரவு வந்துள்ளார்.

அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்தபோது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை காணவில்லை‌. மேலும் வீட்டில் அலமாரியில் இருந்த செல்போன் திருடு போயிருந்தது. பின்பக்க கதவு வழியாக மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

Leave A Reply

Your email address will not be published.