வேலை செய்த வீட்டிலேயே 5 பவுன் நகையை திருடிய வேலைக்கார பெண் கைது!

0 290
Stalin trichy visit

திருச்சி மலைக்கோட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மீனா. கணவர் இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் அதே பகுதி வடக்கு தெருவைச் சேர்ந்த நாகலட்சுமி என்பவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து நாகலட்சுமி மீனாவின் வீட்டில் தூங்கியுள்ளார்.

நேற்று காலை வேலை முடித்து விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது மீனா பிரோவை பார்த்தபோது 5 பவுன் நகையை காணவில்லை. இதுகுறித்து புகார் அளித்ததன் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் நகையை மீனா கண்ணயர்ந்த நேரம் பார்த்து திருடியது தெரியவந்தது. இதையடுத்து நகையை பறிமுதல் செய்த போலீசார் நாக லட்சுமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.