பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர்த்தொழில் நுட்ப பயிலரங்கு
திருச்சி, மார்ச் 18 திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் உயிர்த் தொழில்நுட்பத்துறை சார்பில் இருநாள் பயிலரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில், இந்திய அறிவியல் மைய உறுப்பினரும், தில்லி, இந்திய அறிவியல் கழகத்தின் நுண்ணுயிரி மற்றும் உயிரணு உயிரியல் துறையின் பேராசிரியருமான குமாரவேல் சோமசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், மாணாக்கருக்கு அறிவியல் ஆராய்ச்சியின் நோக்கத்தையும், முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறும் வகையில் நடத்தப்படுகிறது. வளர்ந்து வரும் நவீன தொழில் நுட்பங்களைப் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ள இந்நிகழ்வு நல்லதொரு வாய்ப்பாகும் என்றார். அறிவியல் கழகம் ஸ்ரீமண்டோகேயன், பேராசிரியர் உதயகுமார் ரங்கா, அரவிந்த் மருத்துவ ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் கே. தர்மலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
கல்லூரி முதல்வர் பிரின்ஸி மெர்லின் தலைமை வகித்தார். துறைத்தலைவர் ஆர். ஜாஸ்மின் வரவேற்றார், ஒருங்கிணைப்பாளர் க்ருசன்னே ப்ரீமன் நன்றி கூறினார். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். தில்லி, தேசிய அறிவியல் அகாதமி, அகமதாபாத் அறிவியல் அகாதமி ஆகிய அமைப்புகளின் நிதியுடவியுடன் பயிலரங்கு நடைபெற்றது.