உடலில் காயத்துடன் மாநகர காவல் ஆணையரகத்துக்கு புகாரளிக்க சென்ற பெண்

0 238
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 18  குடும்பத்தகராறில் ஏற்பட்ட காயத்துடன் மாநகர காவல் ஆணையத்துக்கு புகார் அளிக்கச் சென்ற பெண்ணால்  பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி கே கே நகர் உடையான்பட்டி இ பி காலனி சிப்பி நகரைச் சேர்ந்தவர் ஏ. நத்தர்பானு (35). இவர் நேற்று  பிற்பகலில் மாநகர காவல் ஆணையரகத்துக்கு புகார் கொடுக்க சென்றுள்ளார். அவரது உடலில் காயங்கள் இருந்துள்ளது. அங்கு நுழைவாயிலில் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்கள் இது குறித்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு அறிவுரைகூறிய காவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் காயத்துடன் காவல் ஆணையரகம் சென்றேன். இது தொடர்பாக இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.