மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் பா.ஜ.க. தேர்தல் அமைப்பு திருவிழா
திருச்சி, மார்ச் 3 திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாரதிய ஜனதா கட்சியின் மணப்பாறை வடக்கு ஒன்றியத்தில் தேர்தல் அமைப்பு திருவிழா நடைபெற்றது. தேர்தல் அதிகாரியாக மாநில செயற்குழு உறுப்பினர் கிரிஜா மனோகரன் கலந்து கொண்டு கிளை தலைவர்களின் ஒருமித்த கருந்தோடு மாநில தலைவர் K.அண்ணாமலை மற்றும் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் k.k. ஒண்டி முத்து ஒப்புதலோடு மணப்பாறை வடக்கு ஒன்றிய தலைவராக சித்தாநத்தம் R.சுப்ரமணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் ஒன்றிய தலைவர் P.சதீஷ்குமார் செளந்தர்ராஜன், அயோத்தி கண்ணன் மற்றும் S.T.மாவட்ட பொது செயலாளர் C.K.மணிகண்டன், ஒன்றிய பொதுசெயலாளர் C.P.பாலசுப்ரமணி, தொப்பம்பட்டிR.பழனிச்சாமி, துணைதலைவர் பழனியப்பன் செல்வம், இளைஞரணி தலைவர் அரவிந்த், ஒன்றிய விவசாய அணி தலைவர் D.R.செந்தில்குமார் ஊடக பிரிவு தலைவர் கண்ணன், ஊராட்சி தலைவர் கணேசன் மற்றும் அனைத்து கிளை தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்