எந்த கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி

0 259
Stalin trichy visit

திருச்சி, மார்ச்7  எந்த கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.

திருச்சியில் 11 ம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்டம், பன்னாங்கொம்பில் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மாநாட்டில் அதிக அளவிலானோர் கலந்து கொள்வது குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது.

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரை பாஜக கபளிகரம் செய்து விட்டதாக திருமாவளவன் கூறியது தொடர்பான கேள்விக்கு.
பாஜகவைப் பொறுத்தவரை எந்த கட்சியையும் கபளிகரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அது எங்களுக்கு தெரியவும் தெரியாது. பீகாரில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் இவ்வளவு காலம் நிதிஷ்குமார் முதல்வராக இருந்தார். தற்போது அவரது மகன் துணை முதல்வராக உள்ளார். இதில் எந்தவித கபளிகரமும் இல்லை. அதைப் பற்றி திருமாவளவன் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.

விஜய் இரண்டாம் இடம் வருவாய் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறிய கருத்திற்கு பதில் கூறிய நயினார் நாகேந்திரன்.
ஜோதிமணி இவ்வளவு நாளும் தி.மு.கவில் இருந்து எவ்வளவு போராடிக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியும். எந்த கட்சிஎந்த இடம் வரும் என்பதை தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள். தனி மனிதன் யாரும் முடிவு செய்ய முடியாது. தமிழக மக்கள் தேர்தலில் பிரதிபலிப்பார்கள். தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது காட்டு தர்பார் ஆட்சி. சட்டம் ஒழுங்கு, கஞ்சா, போதை, காவல்துறை கட்டுப்பாட்டில் ஏதும் இல்லை. இதனால் இனிமேல் மக்கள் மனதில் இந்த ஆட்சிக்கு இடமும் இல்லை என்று கூறினார்.

திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பொன்னுவேல், மணப்பாறை சட்டமன்ற அமைப்பாளர்
செந்தில்தீபக், சட்டமன்ற இணை அமைப்பாளர் லலிதா , கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் சுரேஷ் ஆகியோர் உள்ளிட்ட பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.