மாற்று இடம் வழங்கிடக் கோரி சாலை மறியல்

0 259
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிவசக்தி நகர் பகுதியில் உள்ள மனைக்கு செல்லும் 40 அடி பாதை ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதை அகற்றிட உத்தரவிட வேண்டும் என்று ஒருவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றிட நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி நேற்று நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற முயன்ற போது சம்மந்தப்பட்ட மக்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் இன்று வரை மாற்று இடம் வழங்காத நிலையில் ஆத்திரமடைந்த சம்மந்தப்பட்ட குடும்பத்தினர் இன்று மாலை தாலுகா அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் சில தினங்களில் உரிய தீர்வு காணப்படும் என்று கூறியதை அடுத்த மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave A Reply

Your email address will not be published.