திருச்சியில் புத்தகத் திருவிழா- புத்தகச்சுவரினை திறந்து வைத்த அமைச்சர்கள்..

0 375
Stalin trichy visit

திருச்சி புத்தகத் திருவிழா வருகின்ற செப்டம்பர் 16 முதல் 26 வரை நடைபெறவுள்ளதை முன்னிட்டு  நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்ட புத்தகச்சுவரினை திறந்து வைத்து, பள்ளி மாணவர்கள் ,காசினை சேமித்து புத்தகம் வாங்கும் விதமாக உண்டியல்களை வழங்கியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புத்தகத் திருவிழா  இலச்சினையினை வெளியிட்டும் ,  விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட குடிநீர் கேன்களை வழங்கியும், பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும் புத்தகத் திருவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இன்று   தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார்,  மாநகர காவல் ஆணையர் க. கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர்.ஆர். வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின் குமார், அ. சௌந்தரபாண்டியன், எம். பழனியாண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.அபிராமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.