மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்…

0 311
Stalin trichy visit

திருச்சி இரட்டை வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் , மூன்றாம் நாளான இன்று யோகா சாம்பியன்ஷிப் போட்டி இனிதே துவங்கியது.

27 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமாா் 380 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகள் தலா 10 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மொத்தம் 5 பிரிவுகளுக்கு 50 சான்றிதழ்களும்,
பதக்கங்களும், சுழற்கோப்பையும் பரிசளிக்கப்பட்டன.

மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்சிறப்பு விருந்தினராக வாசன்வேலி நலச்சங்கச் செயலாளர் சிவகுமாா் , பள்ளிமுதல்வர் உஷா ராகவன் , அமிர்த வித்யாலயம் பள்ளியின் (தமிழ்நாடு& புதுச்சேரி) உடற்கல்வித்துறை ஒருங்கிணைப்பாளர்
கண்ணன் கலந்து கொண்டு , வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளையும்,
சான்றிதழ்களையும் ,சுழற்கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினர். பள்ளி முதல்வர் உஷா ராகவன்  வரவேற்புரையும் , உடற்கல்வி ஆசிரியர் முருகபூபதி  நன்றியுரையும் வழங்கினர். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.