
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குதிரை வண்டி, மாட்டு வண்டி, சைக்கிள் மற்றும் ஓட்டபந்தய எல்கை நடைபெற்றது.
போட்டியை முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து பெரிய குதிரை, சிறிய குதிரை, பெரிய இரட்டை மாடு, புதிய குதிரை, ஒத்த மாடு, சாதா சைக்கிள் பந்தயம், இரண்டு பல் மாடு ,ஓட்டப்பந்தயம் ஆகியவை நடைபெற்றது.
போட்டியில் சென்னை, நாமக்கல், திருச்சி, லால்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து குதிரை மற்றும் மாடுகள் போட்டிகளில் பங்கேற்றது. வெற்றிபெற்ற குதிரைகள், மாடுகளின், உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை தொட்டியம், கிழக்கு மேற்கு ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் செய்திருந்தனர். தொட்டியம் திமுக நகர அவைத்தலைவர் மணி, நகர துணை செயலாளர் சுகுணா குமாரி ராஜசேகர் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.