திருச்சி அருகே கட்டிட வேலை செய்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையை அடுத்த நம்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஆண்டி மகன் தங்கவேல்(46). கட்டட தொழிலாளியான இவா், நேற்று தனது தனலெட்சுமியுடன் மணப்பாறை காந்திநகா் பகுதி ரவி என்பவா் வீட்டில் கட்டட வேலை செய்தாா்.

கட்டடத்தின் முதல் தளத்தில் பணியின்போது கம்பியை கையில் எடுத்த தங்கவேல் மீது மின்சாரம் பாய்ந்தது. இதைக் கண்ட அவரது மனைவி கீழ் தளத்திலிருந்த மின் இணைப்பை துண்டித்தாா். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினா் தங்கவேலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவா் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து சென்ற மணப்பாறை போலீஸாா் தங்கவேல் உடலை வேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தங்கவேலுக்கு டயானதேவி (12), மீனா (10), கண்ணன் (8) என்ற மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.