வட்டாட்சியர் உத்தரவை மீறி நீர்நிலை பகுதியில் இறந்தவர் உடல் அடக்கம் : போலீசில் புகார்

0 228
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 16  திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி ஊராட்சியில் பட்டியலின மக்கள் (நரிக்குறவர் ) 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பட்டியலினத்தை சார்ந்த தாழம்பு மனைவி ரோங்கல் என்பவர் வயது மூப்பு கரணமாக நேற்று இறந்து விட்டார்

இவரது சடலத்தை வழக்கத்திற்கு மாறாக அம்மாபட்டி ஊராட்சியில் உள்ள சிதம்பரம் குட்டை என்ற நீர்நிலை பகுதிகளில் புதைக்க முற்பட்டபோது அங்கு வசிக்கும் பொதுமக்கள் சடலத்தை புதைக்க விடாமல் தடுத்தனர். இதனால் பொதுமக்களுக்கும் நரிக்குறவர் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அறிந்த துறையூர் வட்டாட்சியர் மோகன் பட்டியலின மக்களிடம் இதுவரை எங்கு நீங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்தீர்களோ அங்கேயே அடக்கம் செய்து கொள்ள கூறினார்.

வட்டாட்சியர் பேச்சை ஏற்க மறுத்த பட்டியலின மக்கள் சிதம்பரம் குட்டை நீர்நிலை பகுதியில் புதைத்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறைக்கு உத்தரவிட்டார்

Leave A Reply

Your email address will not be published.