திருச்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கேக் : அமைச்சர் ரமேஷ் வழங்கினார்
திருச்சி, நவ. 13 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கும் நிகழ்வு திருச்சி அரசு சையது முர்துசா மேல்நிலைப்பள்ளியில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் பிரதிக் தயாள், மாநகராட்சி ஆணையர் பொன்மணி முன்னிலையில் இன்று நடைபெற்றது.
முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆணைக்கிணங்க அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் பள்ளி குழந்தைகளுக்கு கேக் மற்றும் முதலமைச்சரின் வாழ்த்து அட்டையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.
திருச்சியில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 2 லட்சத்து 64 ஆயிரத்து 255 நபர்களுக்கு 5 லட்சத்து 28 ஆயிரத்து 510 கேக் பேக்குகள் கொடுத்துள்ளோம். முதலமைச்சர் மாணவச் செல்வங்களுக்கு சிறந்த கல்வியை கொடுப்பதிலும் மகிழ்ச்சியான கல்வி சூழலை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் மாணவர்களை மகிழ்ச்சியூட்டும் விதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இந்த கேக்குகள் வழங்கப்பட்டது. மாணவர்களில் பாகுபாடு இல்லாமல் அனைத்து மாணவர்களுக்கும் தேவையானதை முதல்வர் செய்து கொடுப்பார்.
திருச்சி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளையும் தரம் உயர்த்துவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார். பள்ளிக்கூடத்தில் அரசியல் பேச வேண்டாம் என அரசியல் கேள்விகளை தவிர்த்தார்.