வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு

0 602
Stalin trichy visit

 

திருச்சி, நவ.1 திருச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞாகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியா மா. பிரதீப்குமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞாகளுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து செப்டம்பர் 30 ஆம் தேதியில் 5 ஆண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் அனைவரும் தகுதியுடையவர் ஆவர். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பதிவு செய்து செப்.30 ஆம் தேதியுடன் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதியுடையவர் ஆவர்.
ஆதிதிராவிட, பழங்குடியினா 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினா 40 வயதுக்குள்ளும், ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு மற்றும் வயது வரம்பு ஏதுமில்லை. எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் பயில்பவராக இருக்கக் கூடாது.
இத்தகுதிகளை உள்ளடக்கிய பதிவுதாரர்களுக்கு தமிழ்நாடு அரசால் பத்தாம் வகுப்பு தேர்ச்சியின்மைக்கு ரூ. 200, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ. 400, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ. 600 வழங்கப்படும்.
அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் எழுதப்படிக்கத் தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ. 600, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ. 750, பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.
மேற்கண்ட தகுதியுடைய பதிவுதாராகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச்சான்றிதழ், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மய்யத்துக்கு நேரில் வந்து விண்ணப்பப் படிவத்தை இலவசமாகப் பெற்று பயன்பெறலாம். ஏற்கெனவே, 3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவா மற்றும் பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்கல்வி, பட்டப்படிப்புகள் முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற தகுதியில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.