வெங்காய சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அழைப்பு

0 345
Stalin trichy visit

திருச்சி, அக்.1 திருச்சி மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு ராபி சிறப்பு பருவத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். இந்த பருவத்தில் வெங்காயம் சாகுபடிக்கு நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை விண்ணப்பித்து பிரீமியம் தொகையாக வெங்காய பயிருக்கு ஏக்கருக்கு ரூ.2,078-ஐ அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டு தொகையை செலுத்தி பதிவு செய்திட வேண்டும். இந்த பயிர்க்காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக்கணக்கு புத்தகம் மற்றும் ஆதார்அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயர் மற்றும் விலாசம், நிலப்பரப்பு, சர்வேஎண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக அளித்து பதிவு செய்து, உரிய தொகையை செலுத்தி இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். இந்த தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.