சிசிடிவி கேமரா திருட்டு

0 370
Stalin trichy visit

திருச்சி, ஏப். 29  வையம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் ஒன்றும் இல்லாததால் வெளியே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை திருடிச் சென்ற திருடர்கள்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள குளத்துராம்பட்டியை சேர்ந்தவர் அமுல் சேசுராஜ் (59)  இவர் குடும்பத்துடன் திருச்சி உறையூரில் வசித்து வருகிறார். உறையூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வையம்பட்டி அருகே உள்ள அமயபுரம் கிராமத்தில் சொந்தமாக வீடு உள்ளது. வீட்டிற்கு வாரத்திற்கு ஒருமுறை வந்து சொல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக வையம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார் தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டன மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு சிசிடிவி கேமராக்களை மட்டும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

வையம்பட்டி காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.