திருச்சி மாவட்டத்தில் ஆக.1 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு : இணைய வழியில் பதிவு செய்யலாம் : மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருச்சி, ஜூலை 17 திருச்சி மாவட்டத்தில் 1-ந்தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்குகிறது. இணையவழியில் இன்று முதல் பதிவு செய்யலாம்
திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக் கெடுக்கும் பணி வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு இன்று முதல் இணையம் வழியாகவும் பதிவு செய்து கொள்ள லாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட கலெக்டர் பிரத்திக் தாயள் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-
மக்கள் தொகை கணக்கெ டுப்பு இயக்குனரகத்தின் அறி வுறுத்தலின்படி, திருச்சி மாவட்டத்தில் மக்கள் -தொகை கணக்கெடுப்பு 2027, இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாகவீட்டுப்பட் டியல் மற்றும் வீடுகளின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இக்கணக்கெடுப்பில் முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப் படுத்தப்பட்டு, பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங் களை இணையவழியாக பதிவு செய்யும் சுயக் கணக் கெடுப்பு வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. https://se.census. gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரு கிற 31-ந் தேதி வரை பயன்ப டுத்தி, தங்களது குடும்ப விவரங்களை முன்கூட்டியே எளிதாகவும், பாதுகாப்பாகவும் பதிவு செய்து எஸ்இ ஐ.டி. யைப்பெற்றுக்கொள்ளலாம்.
பின்னர் கணக்கெடுப்பாளர் வீட்டிற்கு வரும்போது அந்த எஸ்இஐ.டி.யை வழங்கினால் போதுமானது. மேலும், அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி முதல் 30-ந்தேதி வரை திருச்சி மாவட் டம் முழுவதும் வீடுதோறும் மக்கள் தொகைகணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிக்காக நியமிக்கப்பட் டுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையா ளர்கள் அரசு வழங்கிய அடையாள அட்டையுடன் வீடுதோறும் வந்து விவரங் களை சேகரிப்பார்கள். இக்க ணக்கெடுப்பு பணியில் அரசு அலுவலர்கள் அலுவலர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் கணக் கெடுப்பாளர்களாகவும், மேற்பார்வையாளர் களாகவும் உள்ளனர்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்பதால், திருச்சி மாவட்ட பொதுமக்கள் அனைவரும் கணக்கெடுப்பு அலுவலர்களுக்கு சரியான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கி, மக்கள்தொகை கணக்கெடுப்பு-2027 பணிகள் வெற்றிகரமாக நடைபெற முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.