கத்தியை காட்டி நகை-பணம் பறிப்பு

0 42
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 17 திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம்,  உப்பிலியபுரத்தை அடுத்துள்ள மாராடி முத்துராஜா தெருவை சேர்ந்தவர் பிச்சை (வயது 54). இவர் மாராடி ஏரிக்கரை பகு தியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று அதிகாலை 4 மணியளவில் பால் கறப்பதற்காக பிச்சை தனது தோட்டத்திற்கு சென்றார்.அங்கு பால்காரருக்காக காத்திருந்தபோது, திடீரென 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் கத்தியைக் காட்டி பிச்சையிடம் இருந்த அரை பவுன் சங்கிலி, அரை பவுன் மோதிரம், ரூ.3 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றதாக தெரிகிறது. இது குறித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.