ஜோசப் கல்லூரியில் பேராயர் கசிமிர் ஞானாதிக்கம் நூற்றாண்டு விழா
திருச்சி, ஜூலை 25 செயின்ட் ஜோசப் கல்லூரியில் பேராயர் கசிமிர் ஞானாதிக்கம் பிறப்பின் நூற்றாண்டு விழா.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வேதியியல் துறையின் முன்னாள் துறைத்தலைவர் பேராயர் கசிமிர் ஞானாதிக்கம். இவரின் பிறப்பின் நூற்றாண்டு விழா கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமையில் நடைபெற்றது.
முன்னாள் துறைத்தலைவர் கே.எஸ். அருள்சாமி வேதியியல் துறையின் முதல் முனைவர் பட்ட நெறியாளரும் துறையின் மண் பரிசோதனை ஆய்வகத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேராயர் அவர்களே என எடுத்துக் கூறி பேராயர் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
கல்லூரிச்செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச., கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. இணை முதல்வர் முனைவர் த.குமார், இயேசு சபை அருள்தந்தையர்கள் முன்னாள் இந்நாள் பேராசிரியர்கள்,முன்னாள் இந்நாள் மாணவர்கள் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.