மத்திய ,வடக்கு மாவட்ட திமுக சார்பில் நாளை கலைஞர் நினைவு நாள் அனுசரிப்பு

0 199
Stalin trichy visit

திருச்சி ஆக. 6  திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளான நாளை ( 07- ந் தேதி) வியாழக்கிழமை காலை 8 மணியளவில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகதுறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி,

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு திருச்சி மத்திய, வடக்கு மாவட்டத்தில் உள்ள திமுகவினர் பெருந்திரளாக கலந்து கொண்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அதே போல் நாளை  நமது மத்திய, வடக்கு மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழகங்கள் மற்றும் அனைத்து அணிகளின் சார்பிலும் கருணாநிதியின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கலைஞர் நினைவு நாளை போற்றிடும் வகையில் கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்து அணிகளின் பொறுப்பளர்கள் கழக முன்னோடிகள் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு மறைந்த நம் தலைவர் கருணாநிதியின் புகழினை போற்றிட வேண்டுகிறோம்.

இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.