பேரறிஞர் அண்ணா சிலைக்கு மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சி, செப்.15 திருச்சியில் பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாளை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு , மாநகராட்சி மேயர் அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்து உறுதிமொழி ஏற்றனர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ பழனியாண்டி மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம் விஜயா ஜெயராஜ் கருணாநிதி குடமுருட்டி சேகர் சேர்மன் துரைராஜ் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஆனந்த், கண்ணன் தொமுச குணசேகர் செவந்தி லிங்கம் ராம்குமார் மோகன்தாஸ் நாகராஜ் கனகராஜ் இளங்கோ கலைச்செல்வி கவிதா உத்தமர் சீலி ராஜேந்திரன், வழக்கறிஞர் கவியரசன் அந்தோணி மணிவண்ணன் பாரதி ஜெயராம், குமார் தஸ்தா, கருத்துகதிரேசன் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்