விவசாயிகளுக்கு தென்னை மரக்கன்றுகள் வழங்கும் விழா

0 348
Stalin trichy visit

 

திருச்சி, ஆக.31  திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே எம்.புத்தூர் மற்றும் அரங்கூர் ஊராட்சிகளில் வேளாண்மை துறையின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

தொட்டியம் அடுத்துள்ள எம்.புத்தூர்,மற்றும் அரங்கூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து இலவச தென்னைக்கன்றுகள் வழங்கினார். மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் எம்.புத்தூர் பஞ்சாயத்தில் 300 பண்ணை குடும்பங்களுக்கு 2 தென்னங்கன்றுகள் வீதம் இலவசமாக 600 தென்னை கன்றுகள் வழங்கப்பட உள்ளது. வேளாண்மை துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் உள்ளது இவ்விழாவில் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பாசிவக்குமார் , அரங்கூர் மற்றும் எம் புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.