சௌடாம்பிகா கல்விகுழுமத்தில் புதிய கட்டமைப்புகள் திறப்பு விழா!

0 391
Stalin trichy visit

தொட்டியத்தில் உள்ள சௌடாம்பிகா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் புதிய கட்டமைப்பு திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி, ஆக.31 தொட்டியத்தில் சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் சார்பில் சௌடாம்பிகா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் புதிதாக டிஜிட்டல் ஸ்டுடியோ ஆர்ட் லேப், நீச்சல் குளம்,ஸ்டீம் லேப் கணித ஆய்வகம் குழந்தைகள் விளையாட்டு மைதானம், செமினார் அரங்கம்,கணினி ஆய்வகம்,கிரிக்கெட் விளையாட்டு பயிற்சியகம்,
கபடி போட்டி விளையாடுவதற்கான நவீன தளம் உள்ளிட்ட பல்வேறு புதிய கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது..

இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்கு புதிய கட்டமைப்புகளை திறந்து வைத்தார். சௌடாம்பிகா கல்வி குழுமங்களின் தலைவர் ராமமூர்த்தி தொட்டியம் பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக இன்னும் பல்வேறு கூடுதல் கட்டமைப்புகளை அமைத்து மாணவர்களின் எதிர்காலம் சிறக்க சௌடாம்பிகா கல்வி குழுமம் துணை நிற்கும் என பேசினார்.

முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பேசும் போது மாணவ மாணவிகளுக்கு கல்வி கற்பதற்கான கட்டமைப்பு என்பது மிக அவசியமானது அந்த வகையில் சௌடாம்பிகா கல்விக் குடும்பத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டமைப்புகளை பார்க்கும் பொழுது நான் மீண்டும் மாணவனாக மாற கூடாதா என்ற ஏக்கம் வருகிறது.

மாணவ மாணவிகள் பள்ளிக் கல்வியில் கற்று சிறப்பான முறையில் தேர்ந்தால் உயர்கல்வி படிப்பு மிக எளிதாக இருக்கும் உயர்கல்வி படிப்பை முடித்தவுடன் சிறந்த வேலை வாய்ப்பு பெறுவதற்கு அடிப்படை பள்ளி கல்வியாக அமைகிறது என்பதை மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் உணர வேண்டும்.சௌடாம்பிகா கல்வி குழுமம் கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொட்டியம் பகுதி மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்க வேண்டும் என பேசினார்.

விழாவில் கல்வி குழுமத்தின் செயலாளர் செந்தூர் செல்வன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, திமுக நகர செயலாளர்விஜய் ஆனந்த், கல்வி குழுமத்தின் நிர்வாக அலுவலர்கள் தினேஷ் குமார், சீதா குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.