மணப்பாறை ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம்
திருச்சி, செப். 9 திருச்சி மாவட்டம், மணப்பாறை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் கோவில்பட்டி சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. 2026 சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவதற்கான ஆயத்த படுத்தும்விதமாக நடந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ராமசாமி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், மாநில இலக்கிய அணி செந்தில் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற அயராது உழைத்த விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தமிழக துணை முதல்வராக அறிவிக்க வேண்டும், மணப்பாறை பகுதிக்கு விளையாட்டு அரங்கம் வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கலைஞர் விளையாட்டு அரங்கம் என பத்திரபதிவு செய்வதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்களை பாராட்டி நன்றி தெரிவிப்பது.
மணப்பாறை பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளதால் தண்ணீர் வினியோகம் தடை ஏற்பட்டு வரும் நிலையை மாற்ற தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களை புதிதாக மாற்றுவதற்கு முயற்சி மேற்கொண்டு அதற்கான நிதியை ஒதுக்குவதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் மற்றும் எம்பி எம்எல்ஏக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது.
மணப்பாறை தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலை அறிவியல் கல்லூரி, விளையாட்டு அரங்கம், குடிநீர் பிரச்சினைகளை தீர்த்ததற்கும் கட்சித் தலைவர்கள் பாராட்டு பெற்ற புகை மாவட்ட செயலாளரான அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியின் உழைப்பையும் செயல்பாட்டையும் பாராட்டும் விதமாக அவருக்கு பாராட்டு விழா நடத்துவது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட அவைத் தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், மாவட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினர் சபிபுல்லா, ஒன்றியக்குழு தலைவர் அமிர்தவள்ளி, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெரியண்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்குபெற்றனர்.