திருச்சி மாவட்டத்தில் 8 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்

0 104
Stalin trichy visit

திருச்சி, ஏப்.1  திருச்சி மாநகர் தென்னூர் உழவர் சந்தை பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திருச்சி மாவட்டத்தில் இருக்கும் 8 தொகுதி திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தொண்டர்கள் மத்தியில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளருக்கு மக்கள் வாக்களித்து பெரும் வாரியாக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்பு திருச்சி மாவட்டத்தில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கை மகத்தான ஒரு அறிக்கையாகும் ஏழை ஏழை மக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் மிகவும் பயன்படக்கூடிய அறிக்கையாகவும் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய திட்டங்களை வகுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.