கே.ராமகிருஷ்ணன் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா

0 14
Stalin trichy visit

திருச்சி, செப்.2 சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் குழும நிறுவனங்கள் சார்பில் கே. ராமகிருஷ்ணன் என்ஜினீயரிங் கல்லூரி மற்றும் கே. ராமகிருஷ்ணன் தொழில்நுட்ப கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மூத்த பத்திரிகையாளர் மற்றும் நிகழ்ச்சிகள் தொகுப்பாளர் எஸ்.ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசுகையில், கல்லூரி வாழ்க்கையை நம்பிக்கை, நோக்கம், விடா முயற்சி மற்றும் நேர்மறையான சிந்தனையுடன் அணுக வேண்டும். மேலும் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு கல்வியிலும், தனிப்பட்ட இலக்கினை நோக்கியும் முன்னேற வேண்டும் என்றார். விழாவில் கல்லூரி குழும தலைவர் டாக்டர் கே.ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர்கள் சீனிவாசன், வாசுதேவன், செயல் இயக்குநர் டாக்டர் எஸ்.குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.