குழந்தை உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி ஸ்ரீரங்கம் டாக்டர் ராஜன் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் லில்லி புளோரா தலைமையில் 06.03.23 நடைபெற்றது. மாவட்ட குழந்தை நலக் குழு உறுப்பினர் பிரபு குழந்தைகளுக்கு உள்ள நான்கு வகையான உரிமைகள், குழந்தைத் திருமணம், பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர் முறையை தடுத்தலில் மாணவர்களின் பங்கு மற்றும் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 குறித்து விழிப்புணர்வு வழங்கினார். ஐடிஎப்சி பஸ்ட் பாரத் நிறுவனத்தின் மேலாளர் சந்துரு வாழ்த்துரை வழங்கினார்.ஆசிரியர் லெட்சுமி நன்றி கூறினார்.