மீண்டும் பிரதமராக மோடி பதவி ஏற்பதை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு

0 246
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 6  மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் மோடி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாளை முன்னிட்டு இளைஞரணி சார்பில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை  பிறந்தநாள் மற்றும் இந்திய பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்க உள்ளதை கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி சார்பில் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு அரை கிராம் தங்க மோதிரம் மற்றும் மருத்துவ குணங்கள் அடங்கிய தொகுப்பு பை ஆகியவற்றை பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் ஏற்பாட்டில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் வழங்கினார்.
இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மது அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பாஜக இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கடந்த 1962 ஆண்டு பிரதமர் நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்றாவது முறை வென்று பிரதமராகும் போகும் நரேந்திர மோடி வெற்றியை கொண்டாடும் விதமாகவும் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணியும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது என தெரிவித்தார்

Leave A Reply

Your email address will not be published.