ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா
திருச்சி, நவ.14 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் லால்குடி கல்வி மாவட்ட அலுவலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 6 ம் வகுப்பு மாணவ,மாணவிகள் கபிஸ்ரீ,சர்வேஸ்வரன், கேசவ் ஆகியோர் தொகுத்து எழுதிய புத்தகத்தை வெளியிட்டார். மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.தொடர்ந்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் பள்ளி தலையாசிரியர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்