வாலிபர்கள் இடையே மோதல் : 4 பேர் கைது

0 233
Stalin trichy visit

திருச்சி,ஜூலை.2-திருச்சி வரகனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், பெரியார் நகரை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே நடந்து முடிந்த கோவில் திருவிழா தொடர்பாக நேற்று இரவு திடீர் என பிரச்சினை ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் அணிகளாக சேர்ந்து கொண்டு மோதிக்கொண்டனர். இந்தஇருதரப்பினரை சேர்ந்த 4 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து காந்திமார்க்கெட் போலீசார் இரு தரப்பினர் மீதும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு வரகனேரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave A Reply

Your email address will not be published.