தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்திய சிறையில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் (Sanitary Worker) இரண்டு பணியிடத்திற்கு எழுத, படிக்க தெரிந்தவர்கள் 01.07.2022 அன்று 18 வயதிற்கு மேற்பட்டு SCA/SC/ST 37 வயதுக்குட்பட்டவர்கள், MBC/BC 34 வயதுக்குட்பட்டவர்கள், OC 32 வயதுக்குட்பட்டவர்கள் (SCA GL priority – 1 நபர்/ GT-GL priority – 1 நபர்) தெரிவு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது. தூய்மை பணியாளர் பதவி ஊதிய விகிதம் Level -1 (15700- 50000) – Rs.15700/- ஆகும்.
மேற்படி தூய்மை பணியாளர் பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்களை(Resume) வருகின்ற 28.10.2022க்குள் திருச்சி மத்தியசிறை சிறைக் கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் வகையில்
அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.