நான் ‘முதல்வன்’ உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம்

0 428
Stalin trichy visit

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனைகள் பெறுவதற்கான வழிகாட்டுதல் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார்.இ,ஆ.ப அவர்கள் தலைமையில் நேற்று (20.10.2022) நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்கல்வி தொடராத மாணவர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு தமிழக அரசின் உயர்கல்வி மற்றும் வழிகாட்டுதல் சார்ந்த ”நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகள் வழங்கி உயர்கல்வி தொடர வழிவகை செய்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் இந்நிகழ்வின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் .பாலமுரளி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பேசினார்.

இப்பயிற்சியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநர், மனநல மருத்துவர் மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர்கள், அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்கள், அரசு தொழில் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் உயர் கல்வி குறித்த ஆலோசனைகள் வழங்கினார்கள்.

முகாமில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடித்து 2022-2023 கல்வி ஆண்டில் உயர்கல்வி தொடராத 35 மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்ந்திட தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.