முக்கொம்புவில் ஆட்சியர் நேரில் ஆய்வு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முக்கொம்புவில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றத்தினையும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் மா .பிரதீப் குமார், இன்று (29.8.22) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, முழு நேர கண்காணிப்புடன் பணியாற்றிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், அந்தநல்லூர் ஒன்றியக் குழுத் தலைவர்
ச. துரைராஜ் மற்றும்
நீர்வளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள்
உடனிருந்தனர்.