நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் : திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

0 98
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 21  நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  25 வது நினைவு நாளை முன்னிட்டு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாமன்ற உறுப்பினர் எல். ரெக்ஸ்  தலைமையில் திருச்சி அரசு மருத்துவமனை அருகிலுள்ள அவரது சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் சத்தியநாதன், பூக்கடை பண்ணீர், கோட்டதலைவர்கள் புத்தூர் மலர் வெங்கடேஷ், ஜங்ஷன் பிரியங்கா பட்டேல், காட்டூர் ராஜா டேனியல் ராய், அரியமங்கலம் அழகர், ஏர்போர்ட் கனகராஜ், பொன்மலை பாலு, அணி தலைவர்கள் முன்னாள் ராணுவ பிரிவு மாநில தலைவர் ராஜசேகரன், கலைபிரிவு மாநில துணைத்தலைவர் அருள், சுப்புராஜ், ஐடி பிரிவு லோகேஷ், ஓபிசி பிரிவு ரியாஸ், ஊடக பிரிவு செந்தில், வார்டு நிர்வாகிகள் கண்ணன், சரவணன், கிஷோர், ரவி, ராஜா, வளன்ரோஸ் மற்றும் பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.