இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நவம்பர் புரட்சி தினக் கொண்டாட்டம்
திருச்சி, நவ.7 திருச்சி, மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக வாளகத்தில் 106 வது நவம்பர் புரட்சி தின கொடி ஏற்றி புரட்சி தினக் கொண்டாட்டம் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார் நகர செயலாளர் ஜனசக்தி உசேன் முன்னிலை வகித்தார்
ஏஐடியுசி போக்குவரத்து கழக. மாநில துணைப்பொது செயலாளர் சுப்ரமணியன் கொடி ஏற்றி உரை நிகழ்தினார் மாவட்ட குழு உறுப்பினர்கள் சௌக்கத்அலி, ராகம், தூனிஷா, ராஜேந்திரன், நல்லுச்சாமி, ஒன்றியகுழு உறுப்பினர்கள் சின்னகண்ணு குருசாமி பழனிசாமி சிவஞானம் நகர துணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு மரியராஜ் நகர பொருளாளர் சின்னத்துரை நகரகுழு உறுப்பினர் துரைச்சாமி மார்கெட் சேகர் போக்குவரத்து கழகம் ஜெயராஜ் ராஜகோபால் குமரசங்கு பிரன்சிஸ் உட்பட சி.பி.ஐ. ஏஐடியுசி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்