கார் ஓட்டுநர் கீழே விழுந்து உயிரிழப்பு

0 1,194
Stalin trichy visit

திருச்சி, நவ.7  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானாவில் நடந்து சென்ற டிரைவர் திடீரென வலிப்பு வந்து கீழே விழுந்தவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

லால்குடியில் உள்ள வரதராஜ்நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் இளங்கோவன்.
இவர் தனியார் டிராவல்ஸில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுவாதி.
லால்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று வேலைக்கு செல்வதற்காக லால்குடியிலிருந்து பேருந்து மூலம் நம்பர் 1 டோல்கேட்டில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென வலிப்பு வந்து மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போது உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து

Leave A Reply

Your email address will not be published.