100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு : அமைச்சர்கள் பங்கேற்பு

0 123
Stalin trichy visit

திருச்சி, பிப்.14 திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு, தொழிலாளர் நலன் மற்றும் திறந்த மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள்,குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் குறித்த மடிப்போடு அடங்கிய மங்களப் பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, மாவட்ட நகர ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் நித்யா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள், மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.