ராகுல்காந்தி கைது நடவடிக்கைக்கு கண்டனம் : திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 26
Stalin trichy visit

திருச்சி, அக்.9  திருச்சியில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. அவர்களை கைது செய்து, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் கூறி மத்திய அரசை கண்டித்து, மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கவுன்சிலர் எல். ரெக்ஸ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட பொருளாளர் முரளி மற்றும் ஜங்ஷன் கோட்டத் தலைவர் பிரியங்கா படேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் நிர்வாகிகள், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாகவும் கண்டன கருத்துகளை தெரிவித்தனர்.

அமைப்புசாரா மாநிலத் தலைவர் மகேஸ்வரன், ஆராய்ச்சி பிரிவு மாநில துணைத் தலைவர் முனைவர் பெஞ்சமின் இளங்கோவன், மாநில செயலாளர் இளங்கோ, மாவட்ட துணைத் தலைவர் ஷேக் தாவுத், மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இதில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள், காங்கிரஸ் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Leave A Reply

Your email address will not be published.