காற்று ஒலிப்பான்கள் பறிமுதல் : மோட்டார் வாகன ஆய்வாளர் நடவடிக்கை
திருச்சி, மார்ச் 21 திருச்சி மாவட்டம், முசிறியில் மோட்டார் வாகன ஆய்வாளர் காற்று ஒலிப்பானை வாகனங்களில் இருந்து அகற்றி அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருச்சி மாவட்டம், முசிறியில் போக்குவரத்து வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களினால் பெரும் இடையூறு ஏற்பாடுவதாக பொதுமக்கள் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் முசிறி மோட்டார் வாகன ஆய்வாளர் (பொறுப்பு) அருண்குமார், முசிறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சின்னையன், உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் வாகன தணிக்கை நடத்தி பைக், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் எனப்படும் காற்று ஒலிப்பானை அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் (பொ) அருண்குமார் கூறும் போது வாகன ஓட்டிகள் கண்டிப்பாக சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.சாலைகள் தனிப்பட்ட ஒருவருக்கானது அல்ல. அனைவருக்கும் பொதுவானது .சாலை விதிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துகளையும் உயிர் இழப்புகளையும் தவிர்க்கலாம்.
தமிழக அரசு சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி தொடர்ந்து மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.சாலை விதிகளை பின்பற்றாதவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.